சென்னை: புச்சிபாபு கிரிக்கெட் தொடரில் டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் – ஜம்மு & காஷ்மீர் அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டம் சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட் செய்த டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 180 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 503 ரன்கள் குவித்திருந்தது.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி 203 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 567 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. ஆர்.எஸ்.அம்ப்ரிஷ் 83, வித்யுத் 37 ரன்கள் சேர்த்தனர். ஜம்மு & காஷ்மீர் அணி தரப்பில் அபித் முஸ்தாக் 3 விக்கெட்கள் கைப்பற்றினார்.
இதையடுத்து பேட் செய்த ஜம்மு & காஷ்மீர் அணி 3-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 65 ஓவர்களில் 4 விக்கெட்கள் இழப்புக்கு 212 ரன்கள் எடுத்தது. அப்துல் சமத் 75, முசைப் அஜாஸ் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர். யாவர் ஹசன் 72 ரன்களுடன் களத்தில் இருந்தார். டிஎன்சிஏ பிரெசிடெண்ட் லெவன் அணி சார்பில் வித்யுத் 3 விக்கெட்களை கைப்பற்றினார்.