அகமதாபாத்: அல்டிமேட் டேபிள் டென்னிஸ் சீசன் 6-ல் நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் யு மும்பா டிடி – தபாங் டெல்லி டிடிசி அணிகள் மோதின. 5 ஆட்டங்கள் கொண்ட இந்த டையில் யு மும்பா அணி 10-5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
லீக் ஆட்டங்களின் முடிவில் தபாங் டெல்லி டிடிசி அணி 44 புள்ளிகளுடன் முதலிடத்தையும், டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் 44 புள்ளிகளுடன் 2-வது இடத்தையும், யு மும்பா 42 புள்ளிகளுடன் 3-வது இடத்தையும், ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் 41 புள்ளிகளுடன் 4-வது இடத்தையும் பிடித்து பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறின.
இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதி ஆட்டத்தில் தபாங் டெல்லி டிடிசி – ஜெய்ப்பூர் பேட்ரியாட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஜூன் 14-ம் தேதி நடைபெறும் 2-வது அரை இறுதி ஆட்டத்தில் டெம்போ கோவா சாலஞ்சர்ஸ் – யு மும்பா அணிகள் மோதுகின்றன.