இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் என்றாலே ஒருகாலத்தில் பதற்றம் அதிகரிக்கும், வென்றேயாக வேண்டும் என்ற பிரஷர் இரு அணிகளுக்கும் இருக்கும்.
ஆனால், சமீபத்திய போட்டிகள் பாகிஸ்தான் அணி கிட்டத்தட்ட கத்துக்குட்டி அணி என்பது போல் இந்தியா அணியினர் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்று வருகின்றனர். ஆசியக் கோப்பையில் இப்போது இரு போட்டிகளிலும் பாகிஸ்தான் இந்திய அணியிடம் ஃபைட் இல்லாமல் தோற்றுப் போயுள்ளது.
இந்த வெற்றியின் சில சுவாரஸ்யமான புள்ளி விவரங்கள்:
>பாகிஸ்தானுக்கு எதிராக டி20 போட்டிகளில் 8 முறை இலக்கை சேசிங் செய்து 8 முறையும் வென்றுள்ளது. இதைத்தான் சேசிங்கில் 8-0 என்று குறிப்பிடுகிறார்கள். மலேசியா அணி தாய்லாந்து அணியை 8-0 என்று சேசிங்கில் வென்றுள்ளது.
>நேற்று துபாயில் பாகிஸ்தானை 172 ரன்கள் சேசிங்கில் இந்தியா வெற்றி பெற்றது 8 வெற்றிகரமான சேசிங்கில் அதிக ரன்களை விரட்டிய போட்டியாக அமைந்தது.
>அபிஷேக் சர்மாவுக்கு ஷாஹின் அப்ரீடி முதல் ஒருவரும் வீச முடியவில்லை, அவர் தடுப்பாட்டமே ஆடுவதில்லை. எல்லா பந்துகளிலும் அடிதான், ரன் இல்லாத பந்துகள் இருக்கும். ஆனால், அவை தடுப்பாட்டமாக இருந்ததில்லை. இது அபிஷேக் அதிரடி பாணி. குரூப் ஸ்டேஜில் அப்ரீடியை முதல் பந்தே இறங்கி வந்து நேர் பவுண்டரி விளாசினார். எனவே இந்த முறை அவர் இறங்கி வருவார் என்று எதிர்பார்த்து ஷார்ட் பிட்சை வீசினார் அப்ரீடி, அந்தோ! அதையும் சரியாகக் கணித்த அபிஷேக், ஹூக் ஷாட்டில் அதை சிக்ஸருக்குத் தூக்கினார்.
>24 பந்துகளில் அபிஷேக் சர்மா எடுத்த அரைசதம் பாகிஸ்தானுக்கு எதிரான இந்திய வீரர் ஒருவரின் அதிவேக அரைசதமாகும். இவருக்கு முன்பாக அபிஷேக் சர்மாவின் மானசீக குரு யுவராஜ் சிங் அகமதாபாத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 29 பந்துகளில் எடுத்த அரைசதமே சாதனையாக இருந்தது.
>அபிஷேக் சர்மா – ஷுப்மன் கில் ஜோடி நேற்று பாகிஸ்தான் பந்துவீச்சை காணாமல் அடித்தது. 105 ரன்களை துவக்க ஜோடி சேர்க்க இதுவே பாகிஸ்தானுக்கு எதிராக டி20-யில் இந்தியாவின் சிறந்த தொடக்க ஜோடி ஸ்கோர் என்ற சாதனையானது. 2022-ல் ஹர்திக் பாண்டியாவும் கிங் கோலிக்கும் இடையே 113 ரன்கள் பார்ட்னர்ஷிப்தான் எந்த விக்கெட்டுக்கும் இடையில் பாகிஸ்தானுக்கு எதிரான டி20 சதக் கூட்டணியாக இருந்தது.
>அபிஷேக் சர்மா பாகிஸ்தானுக்கு எதிராக 2வது அரைசதம் விளாசினார். தொடக்க வீரராக இது ஒரு சாதனை. முன்னர் கவுதம் கம்பீர் 2007 உலகக் கோப்பையில் 75 எடுத்தார்.
>பவர் ப்ளேயில் கில், அபிஷேக் சர்மா சேர்ந்து நொறுக்கிய 69 ரன்கள் என்பது பாகிஸ்தானுக்கு எதிராக பவர் ப்ளேயில் அதிகபட்ச ஸ்கோர் ஆகும்.
>பும்ரா நேற்று 3 ஓவர்களில் 34 ரன்கள் விளாசப்பட்டார், பும்ரா இவ்வளவு ரன்களை டி20யில் இதுவரை 3 ஓவர்களில் கொடுத்ததில்லை. பவர் ப்ளேயில் பும்ராவுக்கு இது ஒரு எதிர்மறை சாதனை என்றே கூற வேண்டும்.
>அதே போல் 2019-க்குப் பிறகு இந்திய அணி 5 கேட்ச்களை கோட்டை விட்டது நேற்றுதான். இதை பாகிஸ்தான் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை.
>சூர்யகுமார் யாதவ் ஹாரிஸ் ரவூஃப்பின் செல்லப்பிள்ளையாக மாறி வருகிறார். ஆம் அவரை ரவூஃப் 3 முறை சந்தித்ததில் 3 முறையும் வீழ்த்தியுள்ளார்.