பாரிஸ்: உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் பாரிஸ் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் இரட்டையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடியானது மலேசியாவின் ஆரோன் சியா, சோ வூய் யிக் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இதில் சாட்விக், ஷிராக் ஜோடி 21-12, 21-19 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியது.
இந்த ஜோடியிடம் தான் கடந்த பாரிஸ் ஒலிம்பிக்கில் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை சாட்விக், ஷிராக் ஜோடி இழந்திருந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக தற்போதைய ஆட்டம் அமைந்தது. அரை இறுதிக்கு முன்னேறி இருப்பதன் மூலம் இந்திய ஜோடி குறைந்தபட்சம் வெண்கலப் பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளது.