இந்நிலையில், தொடரின் கடைசி போட்டி சனிக்கிழமை அன்று பைசலாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்தது. அந்த அணி 37.5 ஓவர்களில் 143 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் தரப்பில் அப்ரார் அகமது 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஷாஹின் அப்ரிடி, முகமது நவாஸ், சல்மான் ஆகா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை பாகிஸ்தான் அணி விரட்டியது. சயீம் அயூப் 77, பாபர் அஸம் 27 மற்றும் முகமது ரிஸ்வான் 32 ரன்கள் எடுத்தனர். 25.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 144 ரன்கள் எடுத்து ஆட்டத்தையும், தொடரையும் பாகிஸ்தான் அணி வென்றது.

