டார்வின்: தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் டார்வின் நகரில் நடைபெற்ற முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
179 ரன் இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்க அணி 9 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்து தோல்வி அடைந்திருந்தது. இந்நிலையில் இரு அணிகளும் இன்று 2-வது டி20 ஆட்டத்தில் பிற்பகல் 2.45 மணிக்கு மோதுகின்றன.