பைல்: டேவிஸ் கோப்பை டென்னிஸில் உலக குரூப் 1 மோதலில் இந்தியா – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின.
இந்த ஆட்டம் சுவிட்சர்லாந்தில் உள்ள பைல் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் முதலில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையரில் தரவரிசையில் 626-வது இடத்தில் உள்ள இந்தியாவின் தட்சிணேஸ்வர் சுரேஷ், 155-வது இடத்தில் உள்ள சுவிட்சர்லாந்தின் ஜெரோம் கிம்முடன் மோதினார்.
இதில் தட்சிணேஸ்வர் சுரேஷ் 7-6 (7-4) 6-3 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இந்த வெற்றியால் இந்தியா 1-0 என முன்னிலை பெற்றது.