Last Updated : 07 Aug, 2025 10:33 AM
Published : 07 Aug 2025 10:33 AM
Last Updated : 07 Aug 2025 10:33 AM

ஜூலை மாதத்துக்கான ஐசிசி சிறந்த வீரர் விருதுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷுப்மன் கில் பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மாதம்தோறும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து ஐசிசி கவுரவித்து வருகிறது. அந்த வகையில் ஜூலை மாதத்துக்கான சிறந்த வீரரை தேர்வு செய்ய 3 வீரர்களின் பெயர்களை ஐசிசி அறிவித்துள்ளது.
இந்த விருதுக்கான பரிந்துரை பெயர் பட்டியலில் இந்தியாவின் ஷுப்மன் கில், இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ், தென் ஆப்பிரிக்க வீரர் வியான் முல்டர் ஆகியோரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இங்கிலாந்து, இந்தியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஷுப்மன் கில் சிறப்பாக விளையாடி 754 ரன்கள் குவித்ததை தொடர்ந்து பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
FOLLOW US