சென்னை: சென்னையில் இன்று முதல் 13-ம் தேதி வரை சான் அகாடமியின் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான 7-வது வாலிபால் போட்டி நடைபெறவுள்ளது.
ஆடவர், மகளிர் என 2 பிரிவிலும் இந்தப் போட்டிகள் சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடத்தப்படும். இன்று காலை 11 மணிக்கு போட்டியின் தொடக்க விழா நடைபெறஉள்ளது. போட்டியை சான் அகாடமி குரூப் ஆஃப் ஸ்கூல்ஸுடன் இணைந்து சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் நடத்துகிறது.
போட்டி தொடக்க விழா நிகழ்ச்சியில் சான் மீடியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும், தமிழ்நாடு வாலிபால் சங்கத்தின் தலைவருமான ஆர்.அர்ஜுன் துரை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பொது மேலாளர் எல்.சுஜாதா, சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் துறையின் உதவி ஆணையர் (ஓய்வு) வி. மனோகரன், சர்வதேச வாலிபால் வீரர் பி. சுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.