பெய்ஜிங்: சீனா மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி ஜோடிக்கு 2-வது இடம் கிடைத்தது.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நேற்று நடைபெற்ற இரட்டையர் போட்டியில் இந்தியாவின் சாட்விக், சிராக் ஜோடி, தென் கொரிய ஜோடியும், உலக சாம்பியனுமான கிம் வான் ஹோ, சியோ செங் ஜே ஜோடியுடன் மோதியது.
இதில் தென் கொரிய ஜோடி 21-19, 21-15 என்ற செட் கணக்கில் இந்திய ஜோடியை வீழ்த்தியது. இதையடுத்து இந்திய ஜோடிக்கு 2-வது இடம் மட்டுமே கிடைத்தது.