மும்பை: குளோபல் செஸ் லீக்கின் 3-வது சீசன் போட்டி வரும் டிசம்பர் 13 முதல் 24 வரை மும்பையில் நடைபெறுகிறது. இந்தத் தொடர் இந்தியாவில் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். இதில் மொத்தம் 6 அணிகள் கலந்து கொள்கின்றன. 12 நாட்கள் நடைபெறும் இந்த போட்டி இரட்டை ரவுண்ட் ராபின் முறையில் நடத்தப்படுகிறது. ஒவ்வொரு அணியும் 10 ஆட்டங்களில் விளையாடும். 6 போர்டுகளில் சிறப்பாக செயல்படும் அணி வெற்றி பெறும்.
இந்நிலையில் இந்த போட்டியில் ஒவ்வொரு அணியில் இடம் பெறும் வீரர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்யும் நிகழ்ச்சி மும்பையில் நேற்று நடைபெற்றது. இதில் பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ் அணிக்காக உலக சாம்பியனான டி.குகேஷும், உலகத் தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள அர்ஜுன் எரிகைசியும் தேர்வானார்கள்.
அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான பேபியானோ கருனா அல்பைன் எஸ்ஜி பைபர்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். 5 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் கங்கஸ் கிராண்ட் மாஸ்டர்கள் அணியில் தொடர்கிறார். அந்த அணியை வலுப்படுத்தும் விதமாக 20 வயதான வின்சென்ட் கீமர் இணைந்துள்ளார். அமெரிக்க கிராண்ட் மாஸ்டரான வெஸ்லி சோ, மும்பா மாஸ்டர்ஸ் அணிக்காக களமிறங்குகிறார்.
அணிகள் விவரம் – அமெரிக்க காம்பிட்ஸ்: ஹிகாரு நகமுரா, ரிச்சர்ட் ராப்போர்ட், விளாடிஸ்லாவ் ஆர்டெமியேவ், பிபிசரா அசவுபயேவா, தியோடோரா இன்ஜாக், வோலோடர் முர்சின்.
அல்பைன் எஸ்ஜி பைபர்ஸ்: ஃபேபியானோ கருனா, ஆர்.பிரக்னாநந்தா, அனிஷ் கிரி, ஹூ யிஃபான், நினோ பாட்சியாஷ்விலி, லியோன் மென்டோன்கா.
கங்கஷ் கிராண்ட்மாஸ்டர்கள்: விஸ்வநாதன் ஆனந்த், ஜவோகிர் சிந்தாரோவ், வின்சென்ட் கீமர், ஸ்டாவ்ரூலா சோலாகிடோ, போலினா ஷுவலோவா, ரவுனக் சத்வானி.
மும்பா மாஸ்டர்ஸ்: மேக்சிம் வாச்சியர்-லாக்ரேவ், ஷக்ரியார் மமேதியரோவ், வெஸ்லி சோ, கோனேரு ஹம்பி, ஹரிகா துரோணவல்லி, பர்தியா தனேஷ்வர்.
பிபிஜி அலாஸ்கன் நைட்ஸ்: டி.குகேஷ், அர்ஜுன் எரிகைசி, லீனியர் டொமிங்குஸ், சாரா காடெம், கேத்ரினா லக்னோ, டேனியல் தர்தா.
திரிவேணி கான்டினென்டல் கிங்ஸ்: அலிரேசா ஃபிரோஸ்ஜா, யி வீ, விதித் குஜராத்தி, அலெக்ஸாண்ட்ரா கோஸ்டெனியுக், ஜு ஜினர், மார்க்’ஆண்ட்ரியா மவுரிஸி.