
சென்னை: எதிர்வரும் ஐபிஎல் 2026-ம் ஆண்டு சீசனை முன்னிட்டு பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்கவைத்த, விடுவித்த வீரர்களின் முழு விவரம் வெளியாகி உள்ளது.
வரும் டிசம்பரில் அடுத்த ஐபிஎல் சீசனுக்கான மினி ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக அனைத்து அணிகளும் இந்த விவரத்தை வெளியிட வேண்டும் என ஐபிஎல் நிர்வாகக்குழு அறிவித்தது. அதன்படி ஒவ்வொரு அணியும் அந்த விவரத்தை தற்போது வெளியிட்டுள்ளன. இதற்கிடையே வீரர்களை டிரேடிங் முறையில் சில அணிகள் மாற்றிக் கொண்டுள்ளன. அதில் ராஜஸ்தான் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சிஎஸ்கே-வும், ஜடேஜாவை ராஜஸ்தானுக்கு டிரேடிங் முறையில் மாற்றிக் கொண்டுள்ளன.

