குவாங்ஜு: தென் கொரியாவின் குவாங்ஜு நகரில் நடைபெற்று வரும் உலகவில்வித்தைப் போட்டியில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது.
நேற்று நடைபெற்ற ஆடவர் காம்பவுண்ட் பிரிவு போட்டியில் இந்தியாவின் ரிஷப் யாதவ், அமன் சைனி, பிரதமேஷ் புஜே ஆகியோர் அடங்கிய அணி 235-233 என்றபுள்ளிகள் கணக்கில் பிரான்ஸ் அணியை வீழ்த்தி தங்கம் வென்றது. அதேபோல் கலப்பு அணிப் பிரிவில் இந்தியாவின் ரிஷப் யாதவ், ஜோதி சுரேகா வென்னம் ஆகியோர் அடங்கிய அணி வெள்ளிப் பதக்கத்தை வென்றது.