பாரிஸ்: 29-வது உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாட்விக் சாய்ராஜ் ராங்கி ரெட்டி, ஷிராக் ஷெட்டி ஜோடி வெண்கலம் வென்றது.
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் அரை இறுதிப் போட்டியில் சாட்விக்-ஷிராக் ஜோடி, சீனாவின் லியு யீ- சென் போயாங் ஜோடியுடன் மோதியது. இதில் லியு யீ-சென் போயாங் ஜோடி 21-19, 18-21, 21-12 என்ற கணக்கில் சாட்விக், ஷிராக் ஜோடியை வீழ்த்தியது. அரையிறுதியில் தோல்வி அடைந்த நிலையில் இந்திய ஜோடிக்கு வெண்கல பதக்கம் கிடைத்துள்ளது.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் சார்பில் மாரத்தான் போட்டி: சென்னை: சென்னையை அடுத்த காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சார்பில் ‘எஸ்ஆர்எம் ரன் 9.0’ என்ற மாரத்தான் போட்டி நேற்று நடைபெற்றது. ‘பூஜ்ஜியக் கழிவுக்காக மாரத்தான் ஓட்டம்’ என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு நடைபெற்ற இந்த நிகழ்வில், மாணவர்கள், பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் உட்பட 2,600க்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். சிறுவர்களுக்காக 700 மீட்டர் ‘ஜூனியர் ரேஸ்’ ஓட்டமும் நடைபெற்றது. நிகழ்ச்சியில் எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சி. முத்தமிழ்ச்செல்வன், பதிவாளர் டாக்டர் எஸ். பொன்னுசாமி, பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் லீனஸ் ஜேசு மார்ட்டின், தென்னிந்தியாவின் முதல் உலக கெட்டில்பெல் சாம்பியனான விக்னேஷ் ஹரிகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.