புதுடெல்லி: உலக கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை அனுஷ்கா தோக்குர் 2 தங்கப் பதக்கத்தை வென்றார்.
டெல்லியில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் நேற்று மகளிர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்திய வீராங்கனை அனுஷ்கா தோக்குர் 461.0 புள்ளிகள் பிடித்து முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு தொடரில் அவர், தங்கம் வெல்வது இது 2-வது முறையாகும். அவர், 50 மீட்டர் ரைபிள் புரோன் பிரிவிலும் தங்கம் வென்றிருந்தார்.
ஆடவருக்கான 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன்ஸ் பிரிவில் இந்தியாவின் அட்ரியன் கர்மாக்கர் 454.8 புள்ளிகளுடன் 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளிப் பதக்கத்தைத் தட்டிச் சென்றார். இந்த தொடரில் இந்தியா இதுவரை 4 தங்கம், 6 வெள்ளி, 3 வெண்கலப் பதக்கம் என 13 பதக்கங்களை வென்றுள்ளது.