தோஹா: தோஹாவில் கத்தார் கிளாசிக் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அபய் சிங், உலக தரவரிசையில் 5-வது இடத்தில் உள்ள எகிப்தின் கரீம் கவாட்டுடன் மோதினார்.
41 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபய் சிங் 11-6, 11-4, 1-11, 11-9 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். அபய் சிங், உலகத் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் உள்ள வீரரை வீழ்த்துவது இதுவே முதன்முறையாகும்.