மும்பை: இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதற்காக இந்திய அணியினரை இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டி உள்ளார்.
இந்திய அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. பரபரப்பான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியின் கடைசி நாளில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசினர். இதனால் கடைசி டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதையடுத்து டெஸ்ட் தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து இந்திய ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், இந்திய அணிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
டெஸ்ட் கிரிக்கெட்.. முழுக்க முழுக்க புல்லரிப்பு! தொடர் 2-2, செயல்பாடு 10/10! இந்தியாவின் சூப்பர்மேன்கள்! என்ன ஒரு அபாரமான வெற்றி! இவ்வாறு சச்சின் அதில் கூறியுள்ளார்