மும்பை: இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறும் தேதிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அறிவித்துள்ளது.
நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து டி20, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
இரு அணிகளும், மொத்தம் 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 சர்வதேச டி20 போட்டிகளில் மோத உள்ளன. சர்வதேச டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்னதாக இந்த தொடர் நடைபெறுகிறது.
ஜனவரி 11-ம் தேதி இந்த போட்டி தொடர் தொடங்குகிறது. முதலில் ஒருநாள் போட்டிகளும், அதைத் தொடர்ந்து டி20 கிரிக்கெட் தொடரும் நடைபெறும். இந்நிலையில் இந்தியா – நியூஸிலாந்து மோதும் போட்டிகளுக்கான இடங்களை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
அதன்படி பரோடா, ராஜ்கோட், இந்தூர் ஆகிய இடங்களில் ஒருநாள் போட்டிகளும், நாக்பூர், ராய்ப்பூர், குவாஹாட்டி, விசாகப்பட்டினம், திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் டி20 ஆட்டங்களும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.