கான்டெர்பரி: இந்தியா ஏ அணிக்கெதிரான அதிகாரப்பூர்வ டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து லயன்ஸ் அணி 3-ம் நாள் ஆட்டத்தின்போது 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் குவித்துள்ளது.
இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த ஆட்டம் இங்கிலாந்தின் கான்டர்பரி நகரிலுள்ள செயின்ட் லாரன்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய இந்தியா ஏ அணி முதல் இன்னிங்ஸில் 125.1 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 557 ரன்கள் குவித்தது. கருண் நாயர் 204 ரன்கள் குவித்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 24, அபிமன்பு ஈஸ்வரன் 8, சர்பிராஸ் கான் 92, துருவ் ஜூரெல் 94, நித்திஷ் ரெட்டி 7, ஷர்துல் தாக்குர் 27, ஹர்ஷ் துபே 32, அன்ஷுல் காம்போஜ் 23, ஹர்ஷித் ராணா 16 ரன்கள் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய இங்கிலாந்து லயன்ஸ் அணி 2-ம் நாள் ஆட்ட நேர இறுதியில் 2 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்திருந்தது. நேற்று 3-ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாடிய அந்த அணி தேநீர் இடைவேளையின்போது 98 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 413 ரன்கள் எடுத்துள்ளது. பென் மெக்கினி 16, எமிலியோ கே 46, மேக்ஸ் ஹோல்டன் 101, ஜேஸ்ம் ரியூ 8, ரெஹான் அகமது 3 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். டாம் ஹெயின்ஸ் 167, டான் மவுஸ்லி 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.