கொச்சி: ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் மிகவும் மதிப்புமிக்க அணியாக முதலிடத்தில் இருந்த சிஎஸ்கேவை பின்னுக்குத்தள்ளி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) முன்னிலை பெற்றுள்ளது.
ஐபிஎல் தொடரில் நடப்பாண்டுக்கான சாம்பியன் பட்டத்தை வென்றதன் மூலம் ஆர்சிபி அணியின் மதிப்பு 269 மில்லியன் டாலராக அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,313 கோடியாக அதிகரித்துள்ளது. முதலிடத்தில் இருந்த சிஎஸ்கேவின் மதிப்பு 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. அந்த அணியின் மதிப்பு ரூ.2,021 கோடியாக உள்ளது.
அதேபோன்று ஐபிஎல்-ன் தனிப்பட்ட மதிப்பு 13.8 சதவீதம் உயர்ந்து 3.9 பில்லியன் டாலர்களாக அதாவது இந்திய மதிப்பில் ரூ.33,540 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும், ஐபிஎல் வர்த்தகத்தின் மதிப்பும் 12.9 சதவீதம் அதிகரித்து 18.5 பில்லியன் டாலர்களாக (இந்திய மதிப்பில் சுமார் ரூ.1.59 லட்சம் கோடி) அதிகரித்துள்ளதாக முதலீட்டு வங்கியான ஹவுலிகான் லோகியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.