ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான ஜூனியர் ஸ்கீட் பிரிவில் இந்தியாவின் மான்ஷி ரகுவன்ஷி இறுதிப் போட்டியில் 53 புள்ளிகளை குவித்து தங்கப் பதக்கம் வென்றார்.
மற்றொரு இந்திய வீராங்கனையான யஷஸ்வி ரத்தோர் 52 புள்ளிகளுடன் 2-வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார். கஜகஸ்தானின் லிடியா பஷரேவா 40 புள்ளிகளுடன் 3-வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
ஆடவருக்கான ஜூனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அபினவ் ஷா 250.4 புள்ளிகள் குவித்து தங்கப் பதக்கம் வென்றார். அணிகள் பிரிவில் ஹிமான்ஷு தலான், அபினவ் ஷா, நரேன் பிரணவ் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி தங்கப் பதக்கம் வென்றது.