ஷிம்கென்ட்: கஜகஸ்தானின் ஷிம்கென்ட் நகரில் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் பிரிவில் இந்திய வீரர் ஐஸ்வரி பிரதாப் சிங் தோமர் தங்கப் பதக்கம் வென்றார்.
நேற்று நடைபெற்ற போட்டியில் தோமர் 462.5 புள்ளிகள் குவித்து முதலிடம் பிடித்தார். சீன வீரர் வென்யு ஜாவோ 462 புள்ளிகளுடன் வெள்ளியையும், ஜப்பானின் நயோயா ஒகாடா 445.8 புள்ளிகளுடன் வெண்கலத்தையும் வென்றனர். முன்னதாக 50 மீட்டர் ரைபிள் 3 பொசிஷன் அணி பிரிவில் இந்தியாவின் தோமர். செயின் சிங், ஷிரோன் ஆகியோர் அடங்கிய அணி 2-வது இடத்தைப் பிடித்து வெள்ளியை வென்றது.