ஹாங்சோ: சீனாவின் ஹாங்சோ நகரில் மகளிர் ஆசிய கோப்பை ஹாக்கி தொடர் நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 4 சுற்றில் இந்திய அணி தனது 2-வது ஆட்டத்தில் நேற்று சீனாவுடன் மோதியது. இதில் இந்தியா 1-4 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
சீன அணி தரப்பில் ஜூ மீரோங் 2 கோல்களும் (4 மற்றும் 56-வது நிமிடம்), சென் யாங் (31-வது நிமிடம்), டான் ஜின்சுவாங் (49-வது நிமிடம்) ஆகியோர் தலா ஒரு கோலும் அடித்தனர். இந்திய அணி சார்பில் 39-வது நிமிடத்தில் மும்தாஸ் கான் கோல் அடித்தார். இந்திய அணி தனது கடைசி ஆட்டத்தில் நாளை (13-ம் தேதி) ஜப்பானுடன் மோதுகிறது.