Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, June 29
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»விளையாட்டு»அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடி அரைசதம்: தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் அசத்தல்!
    விளையாட்டு

    அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடி அரைசதம்: தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் அசத்தல்!

    adminBy adminJune 28, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிரடி அரைசதம்: தென் ஆப்பிரிக்க வீரர் டெவால்ட் பிரெவிஸ் அசத்தல்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    புலவாயோ: தென் ஆப்பிரிக்க அணிக்காக தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார் இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ்.

    நடப்பு டெஸ்ட் உலக சாம்பியன் அணியான தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இன்று தொடங்கிய இந்தத் தொடரின் முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது.

    இந்தத் தொடரில் தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் பவுமா, மார்க்ரம், ரபாடா போன்ற அனுபவ வீரர்கள் விளையாடவில்லை. இந்நிலையில், இளம் வீரர்களுக்கு அந்த அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கேஷவ் மஹராஜ் அணியை கேப்டன் செய்கிறார். இந்நிலையில், முதல் இன்னிங்ஸில் 22.3 ஓவர்களில் 55 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென் ஆப்பிரிக்க அணி.

    அழுத்தம் நிறைந்த அந்த தருணத்தில் 6-வது பேட்ஸ்மேனாக தனது அறிமுகம் டெஸ்ட் போட்டியில் களம் கண்டார் 22 வயதான டெவால்ட் பிரெவிஸ். நிதானமாக இன்னிங்ஸை அவர் அணுகுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தனது வழக்கமான அதிரடி பாணி ஆட்டத்தை அவர் ஆடினார். 41 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் அறிமுக டெஸ்ட் போட்டியில் அதிவேக அரைசதம் விளாசிய பேட்ஸ்மேன்களில் மூன்றாவது இடத்தை அவர் பிடித்தார்.

    4 சிக்ஸர்கள் மற்றும் 3 ஃபோர்களை அவர் விளாசி இருந்தார். கடந்த மே மாத வாக்கில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஐபிஎல் கிரிக்கெட்டில் ஆடிய அதே அதிரடியை தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸிலும் பிரெவிஸ் வெளிப்படுத்தினார். பிரிட்டோரியஸ் உடன் 95 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

    19 வயது வீரரான பிரிட்டோரியஸும் தனது அறிமுகம் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் சதம் விளாசி அசத்தினார். 160 பந்துகளில் 153 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. தென் ஆப்பிரிக்கா அணி முதல் நாளில் 390+ ரன்கள் எடுத்துள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    விளையாட்டு

    டி20-யில் முதல் சதம் விளாசிய ஸ்மிருதி மந்தனா: இங்கிலாந்துக்கு எதிராக அபாரம்!

    June 28, 2025
    விளையாட்டு

    முதல் டெஸ்ட் போட்டியில் பந்துவீச்சு சொதப்பியது எப்படி? – பிரசித் கிருஷ்ணா ஓபடன் டாக்

    June 28, 2025
    விளையாட்டு

    ஹேசில்வுட் அபார பவுலிங்: மே.இ.தீவுகளை ஊதித்தள்ளி ஆஸி. வெற்றி!

    June 28, 2025
    விளையாட்டு

    இந்​திய தடகள வீராங்​கனை சஸ்​பெண்ட்

    June 28, 2025
    விளையாட்டு

    இலங்கைக்கு எதிரான டெஸ்ட்: இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க போராடும் வங்கதேசம்

    June 28, 2025
    விளையாட்டு

    நெல்லை ராயல்ஸ் கிங்ஸை வீழ்த்திய திண்டுக்கல் டிராகன்ஸ்!

    June 28, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • மதுரை காமராசர் பல்கலை. தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் தகுதியானவர்தான்: நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் அமைச்சருக்கு கடிதம்
    • தங்கம் ஒரு பவுன் ரூ.440 குறைந்து ரூ.71,440-க்கு விற்பனை
    • ஆப்டிகல் மாயை: சாப்பிட்ட ஆப்பிள் அல்லது இரண்டு முகங்கள்? நீங்கள் முதலில் பார்ப்பது உங்கள் ஆளுமையின் ஆழமான ரகசியத்தை வெளிப்படுத்தும் – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • புதிய இருசக்கர வாகனங்களுக்கு 2 ஹெல்மெட் கட்டாயம்: விதிகளை திருத்த மத்திய அரசு முடிவு
    • ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு: நூலகர் பதவிக்கு நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.