
சைல்ஹெட்: வங்கதேசம் – அயர்லாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட் நகரில் நடைபெற்று வந்தது. இதன் முதல் இன்னிங்ஸில் அயர்லாந்து 286 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
வங்கதேசம் 141 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 587 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. 301 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய அயர்லாந்து அணி நேற்றைய 4-வது நாள் ஆட்டத்தில் 70.2 ஓவர்களில் 254 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

