சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 12) பவுனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது. நேற்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.440 அதிகரித்தது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் இந்தியாவில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அதோடு உலக நாடுகளின் வர்த்தக ரீதியான செயல்பாடும் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அதன்படி, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இந்நிலையில், தொடர்ந்து மூன்று நாட்களாக தங்கம் விலை ஏற்றம் கண்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை அன்று பவுனுக்கு ரூ.160 என தங்கம் விலை உயர்ந்தது. நேற்று பவுனுக்கு ரூ.440 என விலை உயர்ந்திருந்தது.
இந்தச் சூழலில் சென்னையில் இன்று (சனிக்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,140-க்கு விற்பனையாகிறது. அதேபோல பவுனுக்கு ரூ.520 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.73,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.72,600-க்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
24 காரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு ரூ.71 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,971-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.50 என விலை உயர்ந்து ஒரு கிராம் 7,530-க்கு விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.4.90 காசுகளும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.125-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,25,000-க்கும் விற்பனையாகிறது.