வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்வது தொடர்பான வரைவு விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் இரு சக்கர வாகனம், கார், வேன், ஜீப், லாரி போன்ற வாகனங்களுக்கு, வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் பதிவு எண் வழங்கப்படுகிறது. அதில், ஃபேன்சி எண்ணை வாங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். தற்போது, வாகனங்களுக்கான ஃபேன்சி எண்களை ஏல முறையில் ஒதுக்கீடு செய்யும் வகையில், புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. இதற்காக, மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் செய்து புதிய வரைவு விதிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழக அரசின் அரசிதழில் உள்துறைச் செயலர் தீரஜ்குமார் கூறியிருப்பதாவது: என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து ஃபேன்சி எண்களை தேர்வு செய்ய வேண்டும். ஏலத்துக்கான நுழைவுக் கட்டணமா ரூ.1,000-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் வெற்றி பெற்றவர்கள் 48 மணி நேரத்துக்குள் பணத்தை கட்ட வேண்டும்.
30 நாட்களுக்குள் வாகனத்தை வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கொண்டு வந்து பதிவு செய்யவில்லை என்றால், அந்த நம்பர் ரத்து செய்யப்பட்டு பொது ஏலத்துக்கு விடப்படும். இதில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் அரசிடம் தெரிவிக்கலாம். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.