நாமக்கல் மண்டலத்தில் கடந்த 50 ஆண்டு கோழிப்பண்ணை வரலாற்றில் முதல்முறையாக ஒரு முட்டையின் விலை 595 பைசாவாக நிர்ணயிக்கப்பட்டிருப்பது கோழிப் பண்ணையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது குளிர் சீசன் தொடங்கியுள்ளதால் முட்டை நுகர்வு அதிகரித்துள்ளது. இதனால் முட்டை விலை ஏற்றம் கண்டு வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.
நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் (பைசாவில்): சென்னை 660, பர்வாலா 621, பெங்களூரு 645, டெல்லி 660, ஹைதராபாத் 605, மும்பை 670, மைசூர் 610, விஜயவாடா 625, ஹொஸ்பேட் 585, கொல்கத்தா 685. இதேபோல,பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 104 என அறிவிக்கப்பட்டுள்ளது. முட்டைக்கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.112 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

