இதற்கு நடுவே, கடந்த மே மாதம் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. அப்போது பாகிஸ்தானின் வான் வழி தாக்குதலை எஸ்-400 வான் தடுப்பு ஏவுகணைகள் வெற்றிகரமாக விண்ணிலேயே தாக்கி அழித்தன. குறிப்பாக பாகிஸ்தானின் 5 முதல் 6 போர் விமானங்கள் மற்றும் ஒரு உளவு விமானத்தை 300 கி.மீ. தொலைவில் வரும் போதே சுட்டு வீழ்த்தியது.
இந்த சூழ்நிலையில் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் கூறும்போது, “இந்தியாவின் வான் தடுப்பு திறனை மேம்படுத்துவதற்காக கூடுதலாக ரூ.10 ஆயிரம் கோடியில் எஸ்-400 வான் தடுப்பு ஏவுகணை தொகுப்புகளை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என தெரிவித்தன.

