புதுடெல்லி: காஷ்மீரின் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை விமானங்கள் பிரம்மோஸ் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தின. இதில் தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன.
அடுத்த கட்டமாக பாகிஸ்தானின் ராணுவத் தளங்கள், விமானப்படை தளங்களை குறிவைத்து நடத்திய தாக்குதல்களிலும் பிரம்மோஸ் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டன. இதில் பாகிஸ்தான் தரப்பில் மிகப் பெரியளவில் சேதம் ஏற்பட்டதால், உடனடி சண்டை நிறுத்தத்துக்கு பாகிஸ்தான் முன்வந்தது. இந்நிலையில், பிரம்மோஸ் ரக ஏவுகணைகளை மிக அதிகளவில் வாங்க இந்திய விமானப்படையும், கடற்படையும் விருப்பம் தெரிவித்துள்ளன.