புதுடெல்லி: ஆடிட் பீரோ ஆஃப் சர்க்குலேஷன்ஸ் (ஏபிசி) என்பது நாட்டில் உள்ள செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளின் விற்பனை எண்ணிக்கையை தணிக்கை செய்து சான்றளித்து வரும் லாப நோக்கற்ற அமைப்பு.
பத்திரிகை விற்பனை எண்ணிக்கையை சரிபார்த்து, நம்பகமான தகவல்களை விளம்பரதாரர்களுக்கும் பொதுமக்களுக்கும் ஏபிசி வழங்கி வருகிறது.
இந்நிலையில் ஏபிசி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை 2.77 சதவீத அளவுக்கு பத்திரிகை விற்பனை அதிகரித்துள்ளது. இதன்மூலம் நம்பகமான, சரிபார்க்கப்பட்ட, ஆழமான செய்திகள், தகவல்களைப் பெற வாசகர்கள் தொடர்ந்து செய்தித்தாள்களை நம்புகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் ஜூன் வரை பத்திரிகை விற்பனை2,97,44,148 ஆக உள்ளது. இதுகடந்தாண்டை விட 2.77 சதவீத வளர்ச்சியாகும். இது அச்சு ஊடகக் தொழில்துறையின் ஆரோக்கியமான வளர்ச்சியை பிரதிபலிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.