
சென்னை: பஞ்சாபில் தொழில் தொடங்க 5 நாட்களில் அனுமதி வழங்கப்படும் எனவும், பஞ்சாபின் புதிய தொழில் கொள்கை 2026-ல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ள அம்மாநில அமைச்சர் சஞ்சீவ் அரோரா, தங்கள் மாநிலத்தில் முதலீடு செய்ய தமிழக தொழிலதிபர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
‘பஞ்சாப் இன்வெஸ்ட்’ முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை நுங்கம்பாக்கத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பஞ்சாப் மாநில தொழில் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் சஞ்சீவ் அரோரா பங்கேற்று, பஞ்சாப் மாநிலத்தின் தொழில் வாய்ப்புகள், அரசின் புதிய கொள்கைகள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான சாதகமான சூழல் குறித்து விரிவாகப் பேசினார். தொடர்ந்து, தமிழக தொழிலதிபர்களை பஞ்சாபில் முதலீடு செய்ய வருமாறும் அழைப்பு விடுத்தார்.

