சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.73 ஆயிரத்தை தாண்டியது. அதன்படி, பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.73,120-க்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையில், ஜூன் 23-ம் தேதி முதல், தங்கம் விலை குறைந்து வந்தது. ஜூன் 30-ம் தேதி ஒரு பவுன் ரூ.71,320 ஆக இருந்தது. இதன் பிறகு, ஜூலை 10-ம் தேதி முதல் தங்கம் விலை உயரத் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று ரூ.73 ஆயிரத்தை தாண்டியது. பவுனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.73,120-க்கு விற்பனை செய்யப்பட்டது. 3 நாட்களில் பவுனுக்கு மொத்தம் ரூ.1,120 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.65 உயர்ந்து, ரூ.9,140-க்கு விற்பனையானது. 24 காரட் சுத்த தங்கம் ரூ.79,768-க்கு விற்கப்பட்டது.
வெள்ளி கிராமுக்கு ரூ.4 உயர்ந்து ரூ.125 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.4,000 உயர்ந்து, ரூ.1 லட்சத்து 25 ஆயிரமாகவும் இருந்தது. விலை உயர்வு குறித்து, சென்னை தங்கம்மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கப் பொதுச்செயலாளர் சாந்தகுமார் கூறும்போது, “அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி, தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணம். வரும் வாரத்தில் தங்கம் விலை மேலும் உயர வாய்ப்பு உள்ளது” என்றார்.