சென்னை: சென்னையில் இன்று (செப்.16) 22 காரட் ஆபரணத் தங்கம் பவுன் ரூ.82,000-ஐ கடந்து மீண்டும் ஒரு வரலாறு காணாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தும், அவ்வப்போது சற்று குறைந்தும் வருகிறது. கடந்த ஜூலை மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து கடுமையாக ஏற்றம் கண்டது. குறிப்பாக, கடந்த 6-ம் தேதி (செப்.6) ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்தது. 7-ம் தேதி ரூ.10,005 என்ற விலையே நீடித்தது. 8-ம் தேதி ரூ.10,060 ஆகவும், 9, 10, 11-ம் தேதிகளில் ரூ.10,150 ஆகவும் உயர்ந்தது. ஒரு பவுன் விலை ரூ.81,200 ஆக இருந்தது. இடையில் சொற்ப அளவில் குறைந்தது.
இந்தச் சூழலில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ,82,240-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இதுவரை இல்லாத அளவில் அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.144-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 1,44,000-க்கும் விற்பனையாகிறது.