சென்னை: சென்னையில் இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710-க்கும், பவுனுக்கு ரூ 360 குறைந்து, ஒரு பவுன் ரூ.69,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பவுன் விலை ரூ.70,000-க்கு கீழாக மீண்டும் சரிந்துள்ளது நகை வாங்குவோருக்கு நிம்மதி தந்ததுள்ளது.
கடந்த சில வாரங்களாக சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, தங்கம் விலை உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த ஏப்.22-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,320 ஆக உயர்ந்து, புதிய உச்சத்தை தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
அந்த வகையில், இன்று (மே 20) 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.45 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,710-க்கும், பவுனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு பவுன் ரூ.69,680-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,08,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.