சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. சென்னையில் இன்று (திங்கள்கிழமை) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,915க்கு விற்பனையாகிறது.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பின், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை உயரத் தொடங்கியது. கடந்த ஜூன் 14-ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.74,560 என்றளவில் வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இந்த சூழலில் கடந்த 23-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.8,915-க்கு விற்பனையாகிறது. அதேபோல பவுனுக்கு ரூ.120 குறைந்து, ஒரு பவுன் ரூ.71,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தங்கத்தின் விலையும் இன்று கிராமுக்கு 16 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.9,726-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், இன்று வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. வெள்ளி 1 கிராம் ரூ.119-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 19 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது
கடந்த வாரத்தில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2,440 குறைந்த நிலையில், இந்த வாரத்தின் தொடக்க நாளான இன்றும் விலை குறைந்துள்ளதால் நகைப்பிரியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.