சென்னை: 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று பவுனுக்கு ரூ.160 என குறைந்துள்ளது. நேற்று (செப்.12) தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியது. ஒரு பவுன் தங்கம் ரூ.81,920-க்கு விற்பனையானது. இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது.
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப, சந்தையில் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்தும், அவ்வப்போது சற்று குறைந்தும் வருகிறது. கடந்த ஜூலை மாதம் முதலே தங்கம் விலை தொடர்ந்து கடுமையாக ஏற்றம் கண்டது. குறிப்பாக, கடந்த 6-ம் தேதி ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்தை கடந்தது. 7-ம் தேதி ரூ.10,005 என்ற விலையே நீடித்தது. 8-ம் தேதி ரூ.10,060 ஆகவும், 9, 10, 11-ம் தேதிகளில் ரூ.10,150 ஆகவும் உயர்ந்தது. ஒரு பவுன் விலை ரூ.81,200 ஆக இருந்தது. இந்நிலையில், நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.81,920-க்கு விற்பனையானது.
இந்த சூழலில் சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.20 என குறைந்து ஒரு கிராம் ரூ.10,220-க்கும் பவுனுக்கு ரூ.160 குறைந்து ஒரு பவுன் தங்கம் ரூ. 81,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.143-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,43,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.89,367-க்கும், 18 காரட் தங்கம் ஒரு பவுன் ரூ.67,680- க்கும் விற்பனை ஆகிறது.