புதுடெல்லி: கடந்த 2024-25 நிதியாண்டுக் கான வருமான வரிப் படிவம் (ஐ.டி) தாக்கல் செய்வதற்கு கடந்த ஜூலை 31-ம் தேதி கடைசி நாளாக இருந்தது. எனினும், இதற்கான இணையதளத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற் பட்டதால் செப்டம்பர் 15-ம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்படு வதாக வருமான வரித் துறை ஏற்கெனவே அறிவித்திருந்தது.
இந்த காலக்கெடு முடிய இன் னும் 8 நாட்களே உள்ள நிலை உயில், கடந்த 4-ம் தேதி நிலவரப் படி 4.56 கோடி பேர் மட்டுமே ஐ.டி. படிவத்தை தாக்கல் செய் துள்ளனர். அதில் 4.33 கோடி பேர் மட்டுமே சரிபார்த்தல் (இ-வெரிபை) பணியை முடித் துள்ளனர். அதேநேரம், இது வரை 3.17 கோடி படிவங்களுக்கு மட்டுமே சரிபார்த்தல் பணியை வருமான வரித் துறை முடித்துள் ளது. மேலும் 3.17 கோடி பேர் வரிப் படிவம் தாக்கல் செய்ய வேண்டி உள்ளது.
கடந்த 2024-ம் ஆண்டு ஜுலை 31-ம் தேதி நிலவரப்படி, 2023-24 நிதியாண்டுக்கான வரிப் படிவத்தை 7.28 கோடி பேர் தாக்கல் செய்திருந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் கடைசி வாரத்தில் தாக்கல் செய்தனர். குறிப்பாக, கடைசி நாளான 31-ம் தேதி மட்டும் 70 லட்சம் பேர் தர்க்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.