
சென்னை: சென்னையில் இன்று (அக்.,30) காலை ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.1,800 குறைந்த நிலையில், மாலையில் ரூ.1,600 உயர்ந்து ஒரு சவரன் ரூ.90,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஜனவரியில் தொடங்கி தொடர்ந்து விண்ணை முட்டும் அளவுக்கு எகிறிய தங்கம் விலை, ஒவ்வொரு நாளும் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், இன்று காலை (அக்.,30) ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,100-க்கும், பவுனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு பவுன் ரூ.88,800-க்கும் விற்பனையானது.

