அதன்படி இன்று (புதன்கிழமை) காலையில் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.300 குறைந்து ஒரு கிராம் ரூ.11,700-க்கு விற்பனையானது. அதேபோல பவுனுக்கு ரூ.2,400 குறைந்து, ஒரு பவுன் ரூ.93,600-க்கு விற்பனையானது.
இந்த நிலையில், இன்று இரண்டாவது முறையாக 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.160 குறைந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கு விற்பனையாகிறது. அதேபோல தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 1,280 குறைந்து, ஒரு பவுன் ரூ.92,320-க்கு விற்பனையாகிறது. இதனால் இன்று மொத்தமாக பவுனுக்கு ரூ.3680 குறைந்து விற்பனையாகிறது.

