புதுடெல்லி: இந்தியாவின் பணியாளர்களில் சேவைத் துறையைச் சேர்ந்தவர்கள் பங்கு 30% ஆக உள்ளது.
இதுகுறித்து நிதி ஆயோக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: கரோனா தொற்றுக்குப் பிறகு பொருளாதார மீட்சிக்கு சேவைகள் துறை முக்கிய ஆதாரமாக விளங்குகிறது. எனினும் வேலைவாய்ப்பு வளர்ச்சியில் இன்னமும் சவால்கள் நீடித்து வருகின்றன. இது உட்கட்டமைப்பு மாற்றம் மெதுவாக நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது.

