புதுடெல்லி: இந்தியா மற்றும் ஐரோப் பிய யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (எப்டிஏ) தொடர்பான அடுத் தகட்ட பேச்சுவார்த்தை பெல்ஜி யம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் இன்று தொடங்குகிறது.
இதில், இந்தியாவிலிருந்து மூத்த அதிகாரிகளும், 27 நாடு களின் கூட்டமைப்பான ஐரோப் பிய யூனியனிலிருந்து முக்கிய அதிகாரிகளும் பங்கேற்க உள் ளனர். இருதரப்பில் நடைபெறும் 14-வது கட்ட பேச்சுவார்த்தை இதுவாகும். இன்று (அக்.6) தொடங்கும் இந்த வர்த்தக பேச் சுவார்த்தை 5 நாட்கள் வரை நடைபெற உள்ளது.
மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் பேசும்போது, இந்தியா மற்றம் ஐரோப்பிய யூனியன் இடையி லான தடையற்ற வர்த்தக ஒப் பந்தத்தை வேகமாக செயல் பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் இருதரப்பிலும் ஆக் கப்பூர்வமான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அதற்கான ஒப்பந் தம் கையெழுத்தாகும் என நம் பிக்கை தெரிவித்திருந்தார்.
ஐரோப்பிய வர்த்தக ஆணை யர் மரோஸ் செப்கோவிக்கை இம்மாத இறுதியில் தென்ஆப் பிரிக்காவில் சந்தித்துப்பேசும் போது இருதரப்பு பேச்சுவார்த் தையில் ஏற்பட்டு வரும் முன் னேற்றங்கள் குறித்து பியூஷ் கோயல் விளக்கமளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா மற்றும் ஐரோப் பிய யூனியன் இடையிலான இருதரப்பு சரக்கு வர்த்தகம் 2024-25-ல் 136.53 பில்லியன் டாலராக (ஏற்றுமதி 75.85 பில் லியன் டாலர் மற்றும் இறக் குமதி 60.68 பில்லியன் டாலர்) இருந்தது. இந்தியாவின் ஒட் டுமொத்த ஏற்றுமதியில் ஐரோப் பிய யூனியன் சந்தையின் பங் களிப்பு 17 சதவீதமாக உள்ளது.
அதேபோன்று இந்தியாவுக்கான ஐரோப்பிய யூனியன் ஏற்றும தியின் பங்களிப்பு அதன் ஒட் டுமொத்த வெளிநாட்டு ஏற்றும தியில் 9 சதவீதமாக உள்ளது. 2023-ல் இருதரப்பிலான சேவைகள் ஏற்றுமதி 51.45 பில் லியன் டாலர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.