புதுடெல்லி: இந்தியாவில் அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கம் குறித்து பிட்ச் சொல்யூஷன்ஸ் நிறுவனம் (பிஎம்ஐ) நேற்று வெளியிட்ட ஆய்வறிக்கை: அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்புகள் சில தொழில்களில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6 சதவீதத்துக்கும் மேலாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்படும்பட்சத்தில் அது உள்நாட்டு நுகர்வை பெரிதும் ஊக்குவிக்கும். குறிப்பாக, இரண்டு அடுக்கு வரி சீர்திருத்தத்தை மேற்கொள்வது நிதி, சேவைகள், சிமென்ட், நுகர்வோர் பொருட்கள் துறையில் லாபத்தை அதிகரிக்கும். உள்நாட்டு நுகர்வு சூடுபிடிக்கும்பட்சத்தில் அது அமெரிக்காவின் வரி தாக்கத்தை எதிர்கொள்ள பெரிதும் உதவிகரமாக இருக்கும். இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.