புதுடெல்லி: “ஜிஎஸ்டி குறைப்பு நடவடிக்கை அமெரிக்காவின் வரி உயர்வு பாதிப்பை குறைக்க உதவும்” என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
தற்போது ஜிஎஸ்டியில் மிகப் பெரிய சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த சீர்திருத் தம் குறித்து மத்திய நிதியமைச் சர் நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில் கூறியதாவது: ஜிஎஸ்டி குறைப்பு, நாட்டில் நுகர்வு அதிகரிக்க உதவும். இதன் மூலம் இந்த நிதியாண்டின் இறுதியில் எந்த பாதிப்பும் இருக்காது. தற்போது எனது கவனம் முழுவதும் வரி குறைப்பு மாற்றத்துக்கு மாறுவதை உறுதி செய்வதில்தான் இருக்கும். அமெரிக்காவின் வரி விதிப்பால் ஏற்படும் பாதிப்பை இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தம் குறைக்கும்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் மக்களுக்கும், ஏழைகளுக்கும் உதவும். வரி குறைப்பு காரணமாக வரும் 22-ம் தேதி முதல் மக்கள் அதிகள் வில் பொருட்களை வாங்குவர். கரோண பாதிப்புக்குப்பின் மக் களின் நுகர்வு அதிகரித்தது. அது போல் தற்போதும் அதிகரிக்கும். இதன் காரணமாக ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்தால் ஏற்படும் வரு வாய் இழப்பு இந்த நிதியாண்டிலேயே சமாளிக்கப்படும்.
ஜிஎஸ்டி குறைப்பை எனது வெற்றியாகவோ, சாதனை யாகவோ பார்க்கவில்லை. மாற் றங்களுக்கு ஏற்ப இந்திய மக் களின் செயல்பாடு இருக்கும். அதனால்தான் இந்திய பொருள தாரம் வலிமையாக உள்ளது. மாற்றியமைக்கப்பட்ட இந்த வரி யில் இன்னும் பல சவால்கள் உள்ளன. ஆனால் இந்தியாவின் வளர்ச்சி வீதம் வேகமாக இருப் பதை மக்கள் உறுதி செய்வர். விரைவில் நாம் பொருளாதாரத் தில் மூன்றாவது பெரிய நாடாக மாறவுள்ளோம். அதற்கு ஏற்றபடி நமது அடிப்படை விஷயங்கள் வலுவாக உள்ளது.
பிஹார் சட்டப்பேரவை தேர் தலை மனதில் வைத்து இந்த வரி குறைப்பு நடவ டிக்கை கொண்டுவரப்படவில் லை. இது 140 கோடி மக்களுக்கான நடவடிக்கை. இவ்வாறு நிர்மலா சீதாராமன் கூறினார்.