சென்னை: தமிழகத்தில் கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத 22 கட்சிகள், தேர்தல் ஆணைய பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சிகள் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஓர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 2019-ம் ஆண்டு முதல் கடந்த 6 ஆண்டுகளாக எந்த தேர்தலிலும் போட்டியிடாத 345 பதிவு செய்யப்பட்ட கட்சிகளை முதல் கட்டமாக பட்டியலில் இருந்து நீக்கும் நடைமுறையை தேர்தல் ஆணையம் தொடங்கியது.
இந்த கட்சிகளின் பட்டியலை மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி, விளக்கம் கோர அறிவுறுத்தியது. அந்த வகையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்குக்கு, 24 கட்சிகள் பட்டியல் அனுப்பப்பட்டது. அதில், 22 கட்சிகள் நீக்கப்பட்டன. இதுபோல நாடு முழுவதும் 334 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.