Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி
    மாநிலம்

    2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி

    adminBy adminJune 4, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    2 சிறுவர்களை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த தொழிலாளி குடும்பத்துக்கு அரசு ரூ.10 லட்சம் நிதியுதவி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை தாமிரபரணி ஆறு தடுப்பணையில் தவறி விழுந்த இருவரை காப்பாற்றி நீரில் மூழ்கி உயிரிழந்த பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஸடாலின் நிதியுதவி வழங்கியுள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குழித்துறை கிராமத்தைச் சேர்ந்த பீட்டர் ஜான்சன் என்பவர் குழித்துறை தடுப்பணை மேல்பகுதியில் வாவுபலி திடல் அருகில் குளிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள படிக்கட்டில் நின்று குளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.

    இவர் 01.06.2025 அன்று சுமார் காலை 11.30 மணியளவில் மேற்படி பகுதியில் குளிக்கச் சென்றபோது தடுப்பணையில் வெட்டுமணி பகுதியிலிருந்து குழித்துறை, மதிலகம், நல்லூர் பகுதியைச் சேர்ந்த மனோ (வயது 17) மற்றும் சிறுவன் அகிலேஸ் (வயது 12) ஆகியஇருவரும் நடந்து வந்து கொண்டிருக்கும்போது தவறி தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் விழுந்ததைக் கண்ட பீட்டர் ஜான்சன் இந்த நபர்களை காப்பாற்ற தடுப்பணையின் கீழ்ப்பகுதியில் இறங்கி இரண்டு இளைஞர்களையும் காப்பாற்றி கரை ஏற்றிவிட்ட நிலையில் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

    இச்சம்பவத்தில் தன் உயிரையும் பொருட்படுத்தாமல் இரண்டு இளைஞர்களை காப்பாற்றி தன் உயிரைத் தியாகம் செய்துள்ள பீட்டர் ஜான்சனின் உயிரிழப்பு அவரது குடும்பத்தினர் நண்பர்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு ஓர் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    பீட்டர் ஜான்சனின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் துணிச்சல் மற்றும் தியாக உணர்வைப் போற்றும் வகையில் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து பத்து லட்சம் ரூபாய் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பருக்குள் அமைத்து முடியுங்கள்: அன்புமணி

    June 30, 2025
    மாநிலம்

    மதிமுக உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துகிறதா பாஜக? – நாராயணன் திருப்பதி நேர்காணல்

    June 30, 2025
    மாநிலம்

    அமித் ஷா குறித்து அவதூறு பேச்சு: திமுக எம்.பி. ஆ.ராசாவை கண்டித்து சென்னையில் நாளை பாஜக ஆர்ப்பாட்டம்

    June 30, 2025
    மாநிலம்

    பரந்தூரில் கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கான விலை: ஏக்கருக்கு அதிகபட்சம் ரூ.2.51 கோடி வரை நிர்ணயம்

    June 30, 2025
    மாநிலம்

    சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் இடஒதுக்கீட்டின்படி நிரந்தரப் பணியாளர்களை நியமிக்கவும்: அன்புமணி

    June 30, 2025
    மாநிலம்

    கோயில்களில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தமிழகத்தில் புதிய மாவட்டங்களை டிசம்பருக்குள் அமைத்து முடியுங்கள்: அன்புமணி
    • குறைந்த இரத்த சர்க்கரை உணவுகள்: ஓக்ராவிலிருந்து பூசணி வரை: 5 உணவுகள் இயற்கையாகவே இரத்த சர்க்கரையை குறைக்க உதவும்
    • ‘போர் விமானத்தை இழந்தோம்’ – கடற்படை அதிகாரியின் பேச்சும், இந்திய தூதரகத்தின் விளக்கமும்!
    • சமூக ஊடக பக்கங்கள்: ரிப்போர்ட் முதல் பிரைவசி வரை – உஷாருங்க உஷாரு..!
    • மாற்று பாலினத்தோருக்கு உயர்கல்வி இலவசம்; விடுதிக் கட்டணம் இல்லை: விண்ணப்பிக்க சென்னை ஆட்சியர் அழைப்பு

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.