ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 600-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து சிறப்பு வழிபாடுகள் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி அன்று பொதுமக்கள், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி, பாஜக உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு விநாயகர் சதுர்த்தி விழா ஆகஸ்ட் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது.
விநாயகர் சதுர்த்தி தினத்தையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன், உச்சிப்புளி, பரமக்குடி, கமுதி, திரு வாடானை, மண்டபம், சாயல் குடி, கடலாடி, திருப்பாலைக்குடி, ராமநாதபுரம், திருப்புல்லானி, தேவிப்பட்டினம், ஏர்வாடி, தொண்டி, ஆர்.எஸ். மங்களம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் ஆகஸ்ட் 28 மற்றும் ஆகஸ்ட் 29 ஆகிய நாட்களில் ஊர்வலமும், சிறப்பு வழிபாடுகள் செய்வதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இந்தாண்டு இந்து முன்னனி இயக்கத்தின் சார்பாக “நமது சாமி, நமது கோயில், நாமே பாதுகாப்போம்” என்ற பிரச்சாரத்தை பக்தர்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், இந்துக்களின் ஒற்றுமைத் திருவிழாவாகவும், இந்துக்களின் எழுச்சி விழாவாகவும் நடத்த முடிவு செய்துள்ளோம்.” என தெரிவிக்கப் பட்டுள்ளது.