கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது குழந்தைகள் உள்பட 41 பேர் கூட்ட நெரிசல் சிக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது. இந்நிலையில் நேற்று வடலூர் நான்கு முனை சந்திப்பு மற்றும் கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விஐயை கைது செய்யக் கோரி தமிழ்நாடு மாணவர்கள் சங்கம் என்ற பெயரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன.
அந்த போஸ்டரில் அப்பாவி பொதுமக்களை பலி வாங்கி தப்பியோடிய விஜய் என்கிற அரசியல் தற்கூறியை கொலை குற்றவாளி என கைது செய் என குறிப்பிடப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று அந்த போஸ்டர்களை கல்லூரி மாணவிகள் கிழித்தெறிந்தனர். கல்லூரி மாணவிகளுக்கு ஆதரவாக ஏராளமான இளைஞர்களும் போஸ்டர்களை கிழித்தனர்.