Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Sunday, September 14
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»விஜய்யின் திருச்சி பிரச்சார ‘சம்பவங்கள்’ – நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்கள்!
    மாநிலம்

    விஜய்யின் திருச்சி பிரச்சார ‘சம்பவங்கள்’ – நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்கள்!

    adminBy adminSeptember 14, 2025No Comments3 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    விஜய்யின் திருச்சி பிரச்சார ‘சம்பவங்கள்’ – நிபந்தனைகளை காற்றில் பறக்கவிட்ட தவெக தொண்டர்கள்!
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    திருச்சியில் நேற்று பிரச்சாரம் செய்வதற்காக தவெக தலைவர் விஜய் வந்த போது, காவல் துறை விதித்த நிபந்தனைகளை அவரது தொண்டர்கள், ரசிகர்கள் காற்றில் பறக்கவிட்டனர். இதனால், பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.

    திருச்சி மரக்கடை பகுதியில் தவெக தலைவர் விஜய் நேற்று பிரச்சாரம் செய்தார். இந்த பிரச்சாரத்தின்போது, விஜய்யின் வாகனத்திற்கு பின்னால் 5 வாகனங்களுக்கு மேல் அனுமதிக்கப்படாது. விஜய் வாகனத்தின் முன்னும் பின்னும் தொண்டர்கள் பைக், 4 சக்கர வாகனங்களில் ஊர்வலமாக வரக்கூடாது.

    உயரமான கட்டிடங்கள், மரங்களில் ஏறி நிற்க தொண்டர்களுக்கு அனுமதி இல்லை. மேளதாளங்கள் இசைக்கக் கூடாது. அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது. கர்ப்பிணிகள், குழந்தைகள், வயது முதிர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் வருவதை தவிர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட 23 நிபந்தனைகளை போலீஸார் விதித்திருந்தனர்.

    ஆனால், திருச்சியில் நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்வதற்காக விஜய் வந்தபோது, நிபந்தனைகளை தொண்டர்கள் காற்றில் பறக்கவிட்டனர். சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வந்து விஐபி லாஞ்சில் இருந்த விஜய் வெளியே வந்தபோது, அங்கு அவரை வரவேற்க கூடியிருந்த தொண்டர்கள் ஆர்வமிகுதியில் பாதுகாப்பு தடுப்புகளை உடைத்துக் கொண்டு ஓடி வந்தனர். அங்கிருந்த போலீஸாரும், மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் போராடி அவர்களை தடுத்து நிறுத்தினர்.

    விஜய்யின் பிரச்சார வாகனம் புறப்பட்டதும், அவரது வாகனத்துக்கு முன்பும், பின்பும் ஏராளமான வாகனங்கள் பின் தொடர்ந்து சென்றன. மேலும், அவரது வாகனத்தை ஆயிரக்கணக்கானோர் சூழ்ந்து கொண்டதால், விமான நிலையத்தில் இருந்து 8 கி.மீ தொலைவில் உள்ள பிரச்சார இடமான மரக்கடை செல்ல சுமார் 5 மணி நேரம் ஆனது. இந்த கூட்டத்தில் குழந்தைகளுடன் பெண்கள், சிறுவர்கள் அதிகளவில் கலந்து கொண்டனர்.

    மரக்கடை பகுதியில் உள்ள கட்டிடங்கள், காம்பவுண்ட் சுவர்கள், மரங்கள் மீது ஆபத்தான முறையில் ஏராளமானோர் ஏறி நின்றிருந்தனர். பல இடங்களில் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் வைக்கப்பட்டிருந்த ஒரு பேனர் திடீரென கீழே சாய்ந்தது. ஆனால், யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    ‘மைக்’கில் கோட்டை விட்ட ‘டீம்’: ஆதவ் அர்ஜூனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம் சார்பில் ‘டீம்’ அமைப்பினர் தான் முழுக்க முழுக்க விஜயின் பிரச்சார பயணத்தை கவனித்து வருகின்றனர். போட்டோ, வீடியோ எடுப்பது, அவற்றை சமூக வலைதளங்கள், செய்தி நிறுவனங்களுக்கு அனுப்புவது போன்ற பணிகளை செய்து வருகின்றனர். ஆனால், நேற்று விஜய் பேச ஆரம்பித்த உடனே மைக் வேலை செய்யவில்லை.

    இதனால் விஜய் தனது பேச்சை முழுமையாக பேசி முடிக்காமல் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே பேசினார். மைக் விஷயத்தில்தான் ‘டீம்’ அமைப்பினர் கோட்டை விட்டதால் விஜய் பேச்சை கேட்க முடியாமல் தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.

    கூட்ட நெரிசலில் 15 பேர் மயக்கம்: விஜய்யின் பிரச்சார வாகனம் வேகமாக செல்ல முடியாமல் ஊர்ந்து சென்றது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கிய புத்தூரைச் சேர்ந்த ஹரிணி என்ற பெண் மயங்கி விழுந்தார். அவரை தவெகவினர் விமான நிலையத்தில் இருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதேபோல, மரக்கடை பகுதியில் காலை 8 மணி முதலே இளம்பெண்கள், இளைஞர்கள், குடும்ப பெண்மணிகள் என ஏராளமானோர் காத்திருந்தனர்.

    அங்கு குடிநீர் உள்ளிட்ட எந்த வசதியும் இல்லாததாலும், 10 மணிக்கு மேல் வெயில் கடுமையாக இருந்ததாலும் 15 பேர் மயக்கமடைந்தனர். 5 பெண்களுக்கு வலிப்பு ஏற்பட்டது. சையது முர்துசா பள்ளி ஆஸ்பெஸ்டாஸ் சீட் மீது ஏறி நின்ற 2 இளைஞர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர்.

    வழிநெடுக காலணிகள்: திருச்சி விமான நிலையம் தொங்கி மரக்கடை பிரச்சார செய்யும் இடம் வரையிலும் விஜய் பார்க்க வந்த தொண்டர்கள், பொதுமக்கள், பெண்கள் நெரிசலில் சிக்கி தொலைத்த 1,000-க்கும் மேற்பட்ட காலணிகள் சிதறிக் கிடந்தன. விஜய் வந்து விட்டு சென்ற இடங்கள் அனைத்தும் ஒரு கலவரம் ஏற்பட்டு ஓய்ந்த பகுதி போலவே காட்சியளித்தன.

    விஜய் மீது வழக்கு ?: மரக்கடையில் காலை 10.30 மணி முதல் 11 மணி வரை விஜய் பேச போலீஸார் அனுமதித்திருந்தனர். ஆனால், அவர் பிற்பகல் 3 மணியளவில் தான் பேசினார். இதனால், அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பேசியதாக அவர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்ய அதிகம் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    – எம்.கே.விஜயகோபால், தீ.பிரசன்ன வெங்கடேஷ்



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    பெரம்பலூர் வர இயலாததற்கு வருந்துகிறேன் – விஜய்

    September 14, 2025
    மாநிலம்

    அண்ணா பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு மாலை அணிவிக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!

    September 14, 2025
    மாநிலம்

    இலங்கை தமிழர்கள் இன்னும் அகதிகளாக இருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது! – இலங்கை அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நேர்காணல்

    September 14, 2025
    மாநிலம்

    இந்தியாவை அமெரிக்கா குறைத்து மதிப்பிடக் கூடாது: வெங்கய்ய நாயுடு கருத்து

    September 14, 2025
    மாநிலம்

    ஆவடி பேருந்து நிலையம் இடமாற்றம்

    September 14, 2025
    மாநிலம்

    ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தில் பெறப்படும் அனைத்து மனுக்கள் மீதும் நடவடிக்கை: அதிகாரிகளுக்கு முதல்வர் அறிவுறுத்தல்

    September 14, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • பெரம்பலூர் வர இயலாததற்கு வருந்துகிறேன் – விஜய்
    • தூக்க இழப்பு டிமென்ஷியாவின் அபாயத்தை 40%அதிகரிக்கும், ஆராய்ச்சி காட்டுகிறது: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் | – தி டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • மகாராஷ்டிராவின் கல்யாண், டோம்பிவலி நகரங்களில் ஒரே நாளில் 67 பேர் நாய்க்கடியால் பாதிப்பு
    • Bitchat செயலியும் நேபாள ‘ஜென் ஸீ’ தலைமுறையினரும்: ப்ளூடூத் வழியே நடக்கும் தகவல் பரிமாற்றம்
    • லீடூக்கின் இன்ஸ்டாகிராமைப் பின்தொடர்வது ஸ்பார்க்ஸ் பிளவு வதந்திகளாக சார்லி கிர்க் அஞ்சலி செலுத்திய பின்னர் சூப்பர் ஜூனியரிடமிருந்து சோய் சிவோன் வெளியேறுமாறு ரசிகர்கள் அழைக்கிறார்கள்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • September 2025
    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.