Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Monday, June 30
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»வார விடுமுறைக்காக 925 சிறப்பு பேருந்துகள்
    மாநிலம்

    வார விடுமுறைக்காக 925 சிறப்பு பேருந்துகள்

    adminBy adminJune 26, 2025No Comments1 Min Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    வார விடுமுறைக்காக 925 சிறப்பு பேருந்துகள்
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    சென்னை: வார இறுதி விடுமுறை நாட்களையொட்டி 925 சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வார இறுதி நாட்களையொட்டி 27, 28-ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 595 பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 110 பேருந்துகளும், மாதவரத்தில் இருந்து 20 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளன.

    அதேபோல், பெங்களூரு, திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 200 பேருந்துகளும் என 925 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    மேலும், ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைக்கேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    சிறப்பு பேருந்து இயக்கத்தைக் கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வார இறுதியில் பேருந்துகளில் பயணிக்க 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்

    June 30, 2025
    மாநிலம்

    தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!

    June 30, 2025
    மாநிலம்

    திண்டிவனம் அருகே பல்லவர் கால சிற்பத்தை துர்க்கை அம்மனாக வழிபட்ட மக்கள்: வரலாற்று ஆய்வாளர் விளக்கம்

    June 30, 2025
    மாநிலம்

    அஜித்குமார் என்ன தீவிரவாதியா? – காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி

    June 30, 2025
    மாநிலம்

    மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேட்டில் அதிமுக மவுனம்? – மார்க்சிஸ்ட் குரலால் திமுகவுக்கு நெருக்கடி

    June 30, 2025
    மாநிலம்

    விழுப்புரம் திமுக எம்எல்ஏ மீதான பணமோசடி வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி

    June 30, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • ஹார்வர்ட் பல்கலைக்கழக நிபுணர் கல்லீரல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் முதல் 10 பானங்களை வெளிப்படுத்துகிறார் மற்றும் நீங்கள் தவிர்க்க வேண்டியவை | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • அரசு மருத்துவர்களுக்கு அரசாணை 354-ன் படி ஊதிய மாற்றத்தை அமல்படுத்த வேண்டும்: பெ.சண்முகம்
    • ஆப்டிகல் மாயை ஆளுமை சோதனை: கழுகு அல்லது மலை? நீங்கள் முதலில் பார்ப்பது கவர்ந்திழுக்கும் அல்லது கடின உழைப்பாளி என்றால் முதலில் வெளிப்படுத்துகிறது | – டைம்ஸ் ஆஃப் இந்தியா
    • ‘இந்திய அணிக்கு ஃபீல்டிங் சரியில்லாதது பெரிய பிரச்சினை அல்ல’ – புதிர் போடும் கிரெக் சாப்பல்
    • தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா ஆவணங்கள் மாயம் – கடன் வாங்க, வீடு கட்ட முடியாமல் மக்கள் அவதி!

    Recent Comments

    No comments to show.

    Archives

    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.